/

சாகுபுரத்தில் சுற்றுச்சூழல் தின விழா

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப் பட்டது. 

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப் பட்டது.
நிகழ்ச்சியில், அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
டிசிடபிள்யூ நிறுவன இயக்குநர் முடித் ஜெயின்,  நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்) ஜெயக்குமார்,  அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் மரக்கன்றுகள் நட்டினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த போட்டிகள் நடைபெற்றன.
மேலும்,  அன்றைய தினம் நடைபெற்ற நிறுவன 60ஆவது கால்கோள் தின விழாவிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார். மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து கருத்துப் படம் மூலம் மாணவர், மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாணவர், மாணவிகள் பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.