காயல்பட்டினத்தில் வேலை பார்த்த வீட்டில் திருடிய பெண்ணிடமிருந்து 70 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டன.
காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த அப்துல் சலாம் மனைவி வாவு பாத்திமுத்து(78). இவருக்கு இரு மகன்கள். வெளிநாட்டில் நகைக்கடை வைத்துள்ளனர். அப்துல் சலாம் இறந்து விட்டார். வாவு பாத்திமுத்து அவரது உறவினர் அப்துல் கப்பாருடன்(80) வசித்து வருகிறார். இவர்களுக்கு துணையாக காயல்பட்டினம் பெரிய நெசவு தெரு முஸ்தபா மனைவி முத்து கதீஜா(49) கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தினமும் சமையல் செய்து கொடுத்து விட்டு இரவில் அங்கேயே தங்கி விடுவாராம். ஞாயிற்றுக்கிழமை பாத்திமுத்து பணி செய்து விட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டாராம். அப்போது வாவு பாத்திமுத்து வீட்டில் தங்க நகைகள் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்த பணம், நகைகள் குறைவாக உள்ளதை அறிந்து அவரது மகன்களிடம் விசாரித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் வீட்டில் வேலை பார்த்த கதீஜாவிடம் போலீஸார் விசாரணை செய்ததில், வாவு பாத்திமுத்து வீட்டில் அவர் அவ்வப்போது நகைகள் திருடியது தெரிய வந்ததாம். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து 70 பவுன் தங்க நகைகளும், ரூ. 2 லட்சமும் மீட்கப்பட்டன. போலீஸார் கதீஜாவை கைது விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








