சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தூத்துக்குடி அருகே கார் விபத்தில் ஹோட்டல் உரிமையாளர் சாவு

தூத்துக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கார் விபத்துக்குள்ளானதில் ஹோட்டல் உரிமையாளர் இறந்தார்.

Updated On :26 ஜூன் 2018, 7:50 am IST

தூத்துக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கார் விபத்துக்குள்ளானதில் ஹோட்டல் உரிமையாளர் இறந்தார்.
தூத்துக்குடி கணேஷ்நகரை சேர்ந்தவர் மணி என்ற ஆத்தூர் மணி (65). இவர், தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, குற்றாலம் உள்ளிட்ட பல ஊர்களில் ஹோட்டல்கள் நடத்தி வந்தார். இந்நிலையில், குற்றாலத்துக்கு காரில் சென்ற மணி இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை முத்தையாபுரத்தைச் சேர்ந்த பாலசந்திரன் ஓட்டினார்.
திருநெல்வேலி- தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் வாகைக்குளம் எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலசந்திரன் காயமடைந்தார்.
இது குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.