தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாகர்கோவிலில் சாலை விபத்தில் இளைஞர் சாவு

நாகர்கோவிலில் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.நாகர்கோவிலை அடுத்த பறக்கை காந்திபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ண

Updated On :21 மே 2018, 8:00 pm

நாகர்கோவிலில் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த பறக்கை காந்திபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முத்துசரவணன் (26). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கால்சென்டரில் பணியாற்றி வந்தார். பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இளங்கடை பகுதியில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் முத்துசரவணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையில் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.