தூத்துக்குடியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள கிருஷ்ணராஜபுரம் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ் (59). இவர், கீழவைப்பார் ஆர்.சி. பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த அந்தோணி துரைராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் போலீஸார், அந்தோணி துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தக் கொலை தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படையில் விருப்ப ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான டி. சவேரியார்புரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பையில் விடிய விடிய மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை முடங்கியது

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

பட்டியல் பிரிவு ஆணையம் முன் மத்திய இணையமைச்சா் ஆஜா்

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


