மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆத்தூர், முக்காணி, ஏரல் பகுதிகளில் தாமிரவருணி மஹா புஷ்கர விழா இன்று நிறைவு

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் பதினோறாம் நாளான திங்கள்கிழமை ஆத்தூர், முக்காணி, ஏரல்  மற்றும்

Updated On :22 அக்டோபர் 2018, 8:04 pm

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் பதினோறாம் நாளான திங்கள்கிழமை ஆத்தூர், முக்காணி, ஏரல்  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தாமிரவருணி ஆற்றில் புனித நீராடினர். இப்பகுதியில் புஷ்கரவிழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் 11ஆம் தேதி மஹா புஷ்கர விழா தொடங்கியதால் விழா திங்கள்கிழமை நிறைவு பெற்றது. 
கடந்த 12ஆம்  தேதி தொடங்கிய ஆத்தூர் சோமதீர்த்தம், முக்காணி அகஸ்திய தீர்த்த படித்துறை,  சங்கமேஸ்வர தீர்த்த படித்துறை,   சேர்ந்தபூமங்கலம் சண்டிகா தீர்த்த படித்துறை,  சம்புநாராயண படித்துறை தீர்த்தம்,  உமரிக்காடு அக்னி தீர்த்த படித்துறை,  சொக்கப்பழக்கரை வாழவல்லான கங்கா தீர்த்த படித்துறை,  சேதுக்குவாய்த்தான் வஸ்து தீர்த்த படித்துறை,  ஏரல் ஞான தீர்த்த படித்துறை,  ஏரல் தீர்த்தகரை சுந்தர விநாயகர் கோயில் படித்துறை ஆகியவற்றில் மஹா புஷ்கர விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது. 
திங்கள்கிழமை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து, தாமிரவருணியில் புனித நீராடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.