தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் பதினோறாம் நாளான திங்கள்கிழமை ஆத்தூர், முக்காணி, ஏரல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தாமிரவருணி ஆற்றில் புனித நீராடினர். இப்பகுதியில் புஷ்கரவிழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் 11ஆம் தேதி மஹா புஷ்கர விழா தொடங்கியதால் விழா திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
கடந்த 12ஆம் தேதி தொடங்கிய ஆத்தூர் சோமதீர்த்தம், முக்காணி அகஸ்திய தீர்த்த படித்துறை, சங்கமேஸ்வர தீர்த்த படித்துறை, சேர்ந்தபூமங்கலம் சண்டிகா தீர்த்த படித்துறை, சம்புநாராயண படித்துறை தீர்த்தம், உமரிக்காடு அக்னி தீர்த்த படித்துறை, சொக்கப்பழக்கரை வாழவல்லான கங்கா தீர்த்த படித்துறை, சேதுக்குவாய்த்தான் வஸ்து தீர்த்த படித்துறை, ஏரல் ஞான தீர்த்த படித்துறை, ஏரல் தீர்த்தகரை சுந்தர விநாயகர் கோயில் படித்துறை ஆகியவற்றில் மஹா புஷ்கர விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது.
திங்கள்கிழமை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து, தாமிரவருணியில் புனித நீராடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

