/

பகத்சிங் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பகத்சிங் மன்றத்தின் ஒன்றியக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 7:59 pm

கோவில்பட்டியில் பகத்சிங் மன்றத்தின் ஒன்றியக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகத்சிங் மன்ற விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சின்னச்சாமி தலைமை வகித்தார். பெண்கள் பாதுகாப்புக் குழு வட்டத் தலைவர் சுந்தரி முன்னிலை வகித்தார். மன்றத்தின் மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் மாலையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு முறையாக செயல்பட வேண்டும்; உள்நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், ஆட்டோ தொழிற்சங்க வட்டச் செயலர் கொம்பையா, கயத்தாறு வட்டத் தலைவர் வி.சங்கரலிங்கம், வட்டச் செயலர் பண்ணையார் என்ற கருப்பசாமி, பெண்கள் பாதுகாப்புக் குழு வட்டத் தலைவர் ரத்னாதேவி, மன்றத்தின் ஒன்றியக் குழு உறுப்பினர் பாண்டியராஜன், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.