புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குரும்பூரில் விவசாயிகள்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்செந்தூர் கிளை சார்பில் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வலியுறுத்தி குரும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:38 am

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்செந்தூர் கிளை சார்பில் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வலியுறுத்தி குரும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத் தலைவர் வி. நடேசஆதித்தன் தலைமை வகித்தார். செயலர் எம். ராஜா, துணைச் செயலர்கள் ராஜலிங்கம், ஏ. முருகன்,  துணைத் தலைவர் கோவிந்தன் மற்றும் பொருளாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி பொதுச்செயலர் இ. கிருஷ்ணராஜ், எழுத்தாளர் ஆறுமுக பெருமாள், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம். ராமையா மற்றும் மணிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பகுதியாக போடப்பட்டநாலுமாவடி-ஏரல் சாலையை முழுமையாக தரமாக புதுப்பிக்கவேண்டும்.  அங்கமங்கலம் புதுக்கிராமத்தில் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றி, அம்மக்களுக்கு வழங்க வேண்டும், குளங்களை தூர்வாரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நயினார், அரசகுமார், முத்து, ராம்ராஜ், ராஜகோபால், காசிலிங்கம், பட்டு, முனியாண்டி, சேகர், ஜான்பாண்டி, இராஜேந்திரன், கணேசன் மற்றும் என். முனியம்மாள் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.