புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கோவில்பட்டியில்  துண்டுப் பிரசுரம் விநியோகம்

கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 63ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆயுள் காப்பீட்டுக் கழக சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுர விநியோகம்  நடைபெற்றது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 11:36 pm

கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 63ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆயுள் காப்பீட்டுக் கழக சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுர விநியோகம்  நடைபெற்றது. 
ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில், ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,  துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தார். இதில், சங்கத் தலைவர் பகவதி அம்மை, செயலர் பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  
தொடர்ந்து, ஊழியர் சங்க உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாகச் சென்று சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை பேருந்து நிலையம், ரயில் நிலையம், தினசரி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநியோகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.