தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 5ஆம் தேதி 3 கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது, இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துகின்றது.
சுனாமி வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன்னறிவிப்புகள் பெறப்பட்டு அத்தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது ஒத்திகையின் மூலம் கண்டறியப்படும்.
மாதிரி பயிற்சி ஒத்திகையானது, தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோ நகர் மீளவிட்டான் பகுதி 2, சாத்தான்குளம் வட்டம் படுக்கப்பத்து, விளாத்திகுளம் வட்டம் வேம்பார் ஆகிய கடலோர கிராமங்களில் நடைபெறுகிறது.
செப். 5ஆம் தேதி நடைபெறும் சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியானது, ஒரு மாதிரி ஒத்திகை பயிற்சி மட்டுமே. இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் பீதியோ அடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

புதுகை அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

