தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி ஷரா ஸ்கேட்டிங் கிளப்பில், தூத்துக்குடி ஸ்பீடு ஸ்கேட்டிங் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த 75 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆரியபாலன் 10 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் முதலிடமும், 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தீனதயாள், மனோஜ்குமார் ஆகியோர் முதலிடமும், இன்லைன் பிரிவில் சூரியபெருமாள் முதலிடமும், 12 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் அஸ்வந்த் முதலிடமும் பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 5 மாணவர்களும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலர் செந்தில்கனிராஜா, பொருளாளர் செல்வம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

