செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கலீலுர் ரஹ்மான், வட்டாரத் தலைவர்கள் திருச்செந்தூர் க.மெய்கண்டமுத்து,  ஸ்ரீவைகுண்டம் பாலகிருஷ்ணன், சாத்தான்குளம் சிங்கராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும்; 7ஆவது ஊதிய கமிஷன் தொகை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் பிரேம்குமார்,  மணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவ ஆழ்வார்,  சத்தியமூர்த்தி,  கல்யாணி, சந்திரபாய், சக்திவேல்,  அப்பாசாமி,  ராஜா,  முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் வட்ட இணைச் செயலர் பால்சிங் பாண்டியன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.