தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி மற்றும் மாநில போட்டிக்கான தகுதி தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் கழகமும், தூத்துக்குடி மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் கழகமும் இணைந்து நடத்திய இப்போட்டியில், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 16 வயது வரை தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வென்றோருக்கு பியர்ல்ஸ் ஹெல்பிங்க் ஹேண்ட்ஸ் அமைப்பு நிர்வாகியான தொழிலதிபர் முகமது இப்ராகிம், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலீம், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் கழகச் செயலர் முருகானந்தம் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஸ்பீடு ஸ்கேட்டிங் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷாநவாஸ், செயலர் முபாரக், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் கழக நடுவர் குழுச் செயலர் கெளதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை; குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: வனத் துறை அமைச்சர்

‘2009-ல் உண்ணாவிரத நாடகம்’... கருணாநிதி பற்றிய நிர்மல் குமாரின் சர்ச்சைப் பேச்சுக்கு பேரவைத்தலைவர் கண்டிப்பு!

பருவமழை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய 15 அதிகாரிகள் நியமனம்!



