
கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.
இயந்திரவியல் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சண்முகவேல் தலைமை வகித்தார். துறைத் தலைவர் காளிதாஸ் முருகவேல் முன்னிலை வகித்தார்.
சென்னை எஸ்கார்ட்ஸ் நிறுவன விற்பனை வணிக மேலாளர் ஜான் எபன்ராஜ் ருசோகாயில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கருத்தரங்கு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்துப் பேசினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள்மார்ஷல் மோஷி கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கும், சாம்பியன் பட்டம் பெற்ற சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர் விஷால் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





