விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை:  வேடமிட்ட 9 பேர் பிடிபட்டனர்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகையில், தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 9 பேரை போலீஸார் பிடித்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:59 am IST

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகையில், தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 9 பேரை போலீஸார் பிடித்தனர்.
கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், ஆண்டுக்கு இரண்டு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதையொட்டி, நிகழாண்டில் ஸீ விஜில் என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் சந்தேகப்படும்படியாக தங்கியிருந்த இருவரை போலீஸார் பிடித்தனர். மேலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருவரையும், மீன்பிடி துறைமுகத்தில் இருவரையும் போலீஸார் பிடித்தனர். இதுதவிர, தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வேகமாக படகில் சென்ற மூவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த போலீஸார் என தெரியவந்தது.
பாதுகாப்பு ஒத்திகையில், தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த போலீஸார் 9 பேர் பிடிபட்டுள்ள நிலையில், இந்த ஒத்திகை புதன்கிழமை இரவு வரை நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.