திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேசிய வாக்காளர் தினம்: துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக பதிவு செய்ய வலியுறுத்தி, துண்டுப்

Updated On :24 ஜனவரி 2019, 1:07 am IST

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக பதிவு செய்ய வலியுறுத்தி, துண்டுப் பிரசுரம் விநியோகம் மற்றும் மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது. 
கோவில்பட்டி பயணியர் விடுதி முன் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், உதவியாளர் கோவிந்தராஜ், கல்லூரி முதல்வர் சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சியை, கோட்டாட்சியர் தலைமை வகித்து, தொடங்கிவைத்தார். வட்டாட்சியர் பரமசிவன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சேர்மராஜன், அய்யப்பசாமி, முத்துமாரியப்பன், ராமசுப்பிரமணியன், கார்த்திகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.