சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென மாயமானதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா (45). கடந்த 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த சண்முகையா தனது தாயை பார்ப்பதற்காக கடந்த 15 ஆம் தேதி பரோலில் வெளியே வந்தாராம். 21 ஆம் தேதி மாலை அவர் மீண்டும் சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சிறைக்கு திரும்பாதது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீஸார் தலைமறைவான சண்முகையாவை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


