எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்: கனிமொழி

நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா்.

News image
திமுக எம்.பி கனிமொழி
Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:26 am

DIN

நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா்.

திமுக மாநில மகளிர் அணி செயலரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: 

தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க திமுக ஒரு குழுவை அமைத்து தேசிய கல்விக் கொள்கை மீதான கருத்து வேறுபாடுகளை புத்தக வடிவில் எம்பிக்கள் தலைமையில் மத்திய அரசிடம் கொடுத்தோம். ஆனால் அதில் கூறிய எந்த கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாமல் எந்த மாற்றமும் இல்லாமல் தேசிய கல்விக் கொள்கையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. 

மொழி திணிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் சமூக நீதிக்கு எதிராக மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து. இந்த கரோனா காலத்திலாவது ஒரு ஆண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அதன் பிறகு முற்றிலுமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசு கரோனா காலத்தில் தொடர்ந்து ஏற்படுத்தக்கூடிய குழப்பங்களை பட்டியலிடவே முடியாது. தேர்தல் களத்திற்கு பயன்படுத்தக்கூடிய பிரச்சாரமாக கரோனா சூழ்நிலைகளை பயன்படுத்துகிறார்கள். எல்லா மாநிலத்திலும் எல்லா கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் இணைத்துக்கொண்டுதான் கரோனா தடுப்பு பணியில் செயல்படுகிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கூறக்கூடிய ஆலோசனைகளை, கருத்துக்களை கேட்டுக் கொள்ளாமல் அதிமுக அரசே இதை தன்னிச்சையாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆட்சியாளர்கள் செயல்படுவது தான் தவறு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.