தேவேந்திர குல வேளாளர் அரசாணை: பரிந்துரை செய்த முதல்வருக்கு நன்றி
தேவேந்திர குல வேளாளர் அரசாணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மள்ளர் மீட்புக் களம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்


தேவேந்திர குல வேளாளர் அரசாணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மள்ளர் மீட்புக் களம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அதன் தலைவர் கு.செந்தில்மள்ளர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மள்ளர் மீட்புக் களம் தலைவர் கு.செந்தில்மள்ளர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: நீண்டகாலப் போராட்டத்துக்குப் பின் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மள்ளர் மீட்புக் களம், தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பண்பாடு, வரலாற்றின் அடிப்படையில் மத்திய அரசின் மானுடவியல் குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலும், மள்ளர் மீட்புக் களத்தின் ஆவணங்களோடு கூடிய மனுக்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை ஹென்ஸ் ராஜாவர்மாவின் குழு தமிழக அரசுக்கு அளித்துள்ளது.
அதனடிப்படையில், அந்த அரசாணையை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு இதனை காலம்தாழ்த்தாமல் அரசாணையை வெளியிட வேண்டும். சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை மக்களும், தமிழக அரசும் முறியடிப்பார்கள். தேவேந்திர குல வேளாளர் அரசாணையுடன் 14 சதவீத இடப்பங்கீட்டோடு பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை தமிழக முதல்வர் இன்னும் நிறைவேற்றப்போவதாக அறிவிக்கவில்லை. சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முறைப்படி தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்.
இதை வலியுறுத்தி இம்மாதம் 14ஆம் தேதி மள்ளர் மீட்புக் களம் சார்பில் ஓட்டப்பிடாரம் முப்புலிவெட்டியில் இருந்து இருசக்கர வாகனப் பயணம் தொடங்கும். இந்த பயணக் குழுவினர் 16ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும், இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொள்வதாக கூறினார் அவர். அப்போது, மாநிலப் பொதுசெயலர் தீபா மள்ளத்தியார், மாநில கொள்கை பரப்புச் செயலர் பரமசிவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...