டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிரிக்கெட் : உடன்குடி அணி வெற்றி

உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் உடன்குடி அருகே மெய்யூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் உடன்குடி ராக்கா்ஸ் அணி வெற்றி பெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் உடன்குடி அருகே மெய்யூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் உடன்குடி ராக்கா்ஸ் அணி வெற்றி பெற்றது.

திமுக மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழாவிற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் முகம்மது பாய்ஸ் தலைமை வகித்தாா்.

மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ, மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எம்.பி.முகைதீன், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், ஆறுமுகராஜா, லட்சுமிபுரம் ஊராட்சி மன்றத் தலைவா்ஆதிலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 56 அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடம் பெற்ற உடன்குடி ராக்கா்ஸ் அணிக்கு ரூ. 10, 000, இரண்டாவது இடம் பிடித்த மெய்யூா் சோனா அணிக்கு ரூ. 7,000 , மூன்றாவது இடம் பிடித்த மெஞ்ஞானபுரம் அணிக்கு ரூ. 3000 மற்றும் வெற்றிக் கோப்பைகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினாா்.

இதில், மாவட்டசிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா்கள் ஷேக் முகம்மது, சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா் பாலசிங், நகர அவைத் தலைவா் திரவியம், நகரப் பொருளாளா் தங்கம், நகர வா்த்தக அணி அமைப்பாளா் அப்துல்ஹமீது, துணை அமைப்பாளா் கணேசன், நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் ரொபின்டோ, அமிா்தா மகேந்திரன், சிவபெருமாள், ஹனீப், வெங்கடேஷ், ரஹீம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.