பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வஉசி மார்க்கெட்டை இடிக்கக் கூடாது: வியாபாரிகள் முற்றுகை

தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் கடைகளை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

News image
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.
Updated On :7 டிசம்பர் 2020, 8:58 am

DIN

தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் கடைகளை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனிடம் அளித்த மனுவில்: "தூத்துக்குடி பொதுமக்களின் நன்மைக்காக வஉசி மார்க்கெட் ஆரம்பிக்கப்பட்டு முதலில் வாரச் சந்தையாக இயங்கி வந்தது. அதன் பின்னர் தினசரி சந்தையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

அதில் நாங்கள் கடைகள் குத்தகைக்கு எடுத்து சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நாங்களும் எங்களது மூதாயர்களும் தொழில் செய்து வருகிறோம். தொடர்ச்சியாக கடைகளுக்கு உண்டான வாடகைகளை பாக்கியின்றி செலுத்தி வருகின்றோம். 

இந்த கடைகள் எங்களது வாழ்வாதாரமாக உள்ளது. இதில் உள்ள 95% கடைகள் நல்ல நிலைமையிலும் உறுதியாகவும் உள்ளன. மார்க்கெட்டில் தமிழக அரசு பல லட்சம் செலவு செய்து 9 வருடங்களுக்கு முன்பு மீன் மார்க்கெட்டிற்கு கட்டடங்கள் கட்டி மார்க்கெட்டில் உள்ள கடைகள் நல்ல நிலைமையில் உள்ளது.

மார்க்கெட்டில் நல்ல நிலையில் உள்ள கடைகளை இடித்து கட்டுவதினால் மக்களின் வரிப் பணம் வீணாகிவிடும். நாங்கள் காய்கறி, பழங்கள், மீன்கடைகள், கறிகடைகள், பலசரக்கு, பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை விவசாயிகளிடம், மீனவர்களிடமும், உற்பத்தியாளர்களிடமும் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றோம். 

அதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் நல்ல தரமான பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் மாநகராட்சியின் புதிய திட்டம் வந்தால் நல்ல தரமான பொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேலும், தனிநபரின் ஆதிக்கம் அதிகரிக்க வழிவகுக்கும். அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் தொடர்ந்து சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படும். வஉசி மார்க்கெட் இருக்கும் பகுதியானது அரசு "கனாமி ஏரியா" என்று வரையறுக்கப்பட்ட பகுதியாகும். மார்க்கெட்டினை நம்பி சுமார் 8000 குடும்பங்கள் உள்ளன. 

ஆகையால் தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் கட்டுவதற்காக கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்தை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.