ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

பாரதி பிறந்த நாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை

பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

News image
பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு.
Updated On :11 டிசம்பர் 2020, 5:53 am

DIN

மகாகவி பாரதியாரின் 139ஆவது ஆண்டு பிறந்தநாள் அரசு விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இன்று காலை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். 

விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பாரதி மணி மண்டபத்தில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Story image

பின்னர் மருத்துவரும் பாரதி அன்பருமான தென்காசி தங்கப்பாண்டியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எழுதிய மகாகவி பாரதியின் கவிதை தொகுப்பு நூலினை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். 

விழாவில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, எட்டயபுரம் வட்டாட்சியர் ஐயப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பாரதி இல்லக் காப்பாளர் மகாதேவி, குற்றாலம் பொதிகை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கல்யாணி சிவகாமி நாதன், கதிர்வேல், கார்த்திக் ராஜா, ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.