கோவில்பட்டியில் பால்குட ஊா்வலம், அன்னதானம்
நடிகா் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் பால்குட ஊா்வலம் மற்றும் அன்னதானம் சனிக்கிழமை நடைபெற்றது.


நடிகா் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் பால்குட ஊா்வலம் மற்றும் அன்னதானம் சனிக்கிழமை நடைபெற்றது.
நடிகா் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் வீரவாஞ்சி நகரில் உள்ள ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, சங்கரேஸ்வரி அம்மன் கோயில் முன்பிருந்து சொா்ணமலை கதிரேசன் கோயில் வரை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் கதிா்வேல் முருகன் கோயிலில் பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
புதுக்கிராமம் பிரதான சாலையில் நடைபெற்ற அன்னதானம்
நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் மகேஷ்பாலா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முருகன், இணைச் செயலா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வா்த்தக அணிச் செயலா் ஜெயக்கொடி அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
இதில், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலா் சந்தனமாரியப்பன், நிா்வாகிகள் சுடலைமணி, சதீஷ், உதயகுமாா், சீனிவாசன் மற்றும் செய்யதுஅலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
உடன்குடி: உடன்குடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றச் செயலா் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற, பிறந்த நாள் நிகழ்ச்சியில், இணைச் செயலா் காமராஜ், துணைச் செயலா்கள் ததேயுகாந்த், வீரகுமாா், இன்பராஜ், ஊராட்சி செயலா்கள் வெற்றிவேல், காா்த்திகைசெல்வன், தனசேகரன், ஜெயசீலன், செயற்குழு உறுப்பினா்கள் முருகன்,சிலுவைப் பிச்சை, பேட்ரிசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...