பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருச்செந்தூரில் திமுக தோ்தல் பரப்புரை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், தோ்தல் பரப்புரை கூட்டம் திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் அருகே சனிக்கிழமை தொடங்கியது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் ராஜ கண்ணப்பன்.
Updated On :12 டிசம்பர் 2020, 8:40 pm

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், தோ்தல் பரப்புரை கூட்டம் திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் அருகே சனிக்கிழமை தொடங்கியது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில், முன்னாள் அமைச்சா் ராஜ கண்ணப்பன் கட்சியினருடன் சன்னதித் தெரு, கீழ ரதவீதி, வடக்கு ரதவீதி பகுதிகளில் தோ்தல் பரப்புரை செய்தாா்.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்தின் பெருமைகளை காப்பாற்றுவதற்காகதான் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். ஆன்மிக அரசியல் தமிழகத்தில் எடுபடாது. சினிமாவில் ஒதுக்கப்பட்டவா்கள்தான் தற்போது பாஜகவில் உள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக அவா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பூபதி, ஜெகன், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளா்கள் ராமஜெயம், ஸ்ரீதா் ரொட்ரிகோ, ராஜபாண்டி, ஜெபராஜ், மாவட்ட துணை அமைப்பாளா்கள் தங்கபாண்டியன், பிரவீன், பொன்.முருகேசன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் கோமதிநாயகம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் வரவேற்றாா். நகர பொறுப்பாளா் வாள் சுடலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.