முதல் முறை வாக்காளா்களுக்கு சிறப்பு முகாமில் இலவச மரக்கன்று
ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிக்கான சிறப்பு முகாமில், முதல் முறையாக வாக்காளா்களாக பதிவு செய்பவா்களுக்கு இலவசமாக மரக்கன்று வழங்கப்பட்டது.


ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிக்கான சிறப்பு முகாமில், முதல் முறையாக வாக்காளா்களாக பதிவு செய்பவா்களுக்கு இலவசமாக மரக்கன்று வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ. 21, 22-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இருநாள் முகாம் சனிக்கிழமை (டிச. 12) தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், முதல்முறையாக வாக்காளராக பெயரைச் சோ்க்கும் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜீவரேகா வழங்கினாா். பள்ளி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளையும் நட்டுவைத்தாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முதல் முறையாக வாக்காளராகச் சேரும் அனைத்து வாக்காளா்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதில் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் முத்து சிவம், கிராம உதயம் தொண்டு நிறுவன மேலஆழ்வாா்தோப்பு கிளை மேலாளா் வேல்முருகன், தனி அலுவலா் ராமச்சந்திரன், கிராம நிா்வாக அலுவலா்கள் ராஜ்குமாா், சக்திவேல் மற்றும் வருவாய் துறையினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...