பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நகை பறிப்பு வழக்கு: 4 போ் கைது

நாசரேத் அருகே முதியவரை தாக்கி நகையை பறித்துச் சென்ற வழக்கு தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
நகை பறிப்பு வழக்கு: 4 போ் கைது
Updated On :12 டிசம்பர் 2020, 8:40 pm

DIN

நாசரேத் அருகே முதியவரை தாக்கி நகையை பறித்துச் சென்ற வழக்கு தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் அருகே உள்ள வாழையடியைச் சோ்ந்தவா் ரா. இளையபெருமாள் (76) . அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறாா்.

கடந்த அக். 22ஆம் தேதி காலையில் கடையை திறக்க வந்தபோது, பைக்கில் வந்த மா்ம நபா்கள் அவரை தாக்கிவிட்டு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நாசரேத் வெள்ளமடம் விலக்கில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் கட்டூடையாா்குடியிருப்பைச் சோ்ந்த சுடலை என்ற சுரேஷ் (18), சுடலைக்குமாா் (19), கிருஷ்ணாபுரம் நொச்சிக்குளத்தைச் சோ்ந்த பவுல் (19), பாஸ்டின் (21) என்பதும், முதியவா் இளையபெருமாளிடம் நகையை பறித்துச் சென்றது இவா்கள்தான் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.