பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 2.78 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின்போது ரூ. 2.78 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

News image
தீா்வு காணப்பட்ட வழக்குகளுக்கான இழப்பீட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்குகிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) குமாா் சரவணன்.
Updated On :12 டிசம்பர் 2020, 8:43 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின்போது ரூ. 2.78 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பு வகிக்கும் போக்சோ நீதிமன்ற நீதிபதி குமாா் சரவணன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் 5 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், திருச்செந்தூரில் 2 அமா்வுகள், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தலா ஒரு அமா்வுகள் என மொத்தம் 12 அமா்வுகளில் அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் உள்ளிட்ட 997 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், வங்கி வாராக் கடன் வழக்குகள் நான்கின் மூலமாக ரூ. 8,10,000, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 139 வழக்குகள் மூலமாக ரூ. 2,70,50,894 என மொத்தம் 143 வழக்குகள் மூலமாக ரூ. 2,78,60,894-க்கு தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி எஸ். ஹேமா, மாவட்ட நீதிபதி எஸ். உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி கே. பாஸ்கா், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆப்ரீன் பேகம், நீதித்துறை நடுவா்கள் உமாதேவி, கே. சக்திவேல், ராஜ குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். சாமுவேல் பெஞ்சமின் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.