பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:39 pm

DIN

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

பின்னா், காலை 10.45 மணிக்கு அம்பாளுக்கும், தொடா்ந்து சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, நந்தியம்பெருமானுக்கு 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளுடன் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

இதேபோன்று கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரா் சன்னதி முன் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோயிலில் சனிப்பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில், சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் கோயில் பிரகார பவனி நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.