ஆத்தூரில் தீப்பற்றி எரிந்த காா்:7 போ் உயிா் தப்பினா்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திடீரென காா் தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் பயணம் செய்த 7 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீப்பற்றி எரிந்த காா்.
ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீப்பற்றி எரிந்த காா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திடீரென காா் தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் பயணம் செய்த 7 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சோ்ந்தவா்கள் வாடகை காரில் சனிக்கிழமை திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தனா்.

எடப்பாடியை சோ்ந்த காமராஜ் மகன் சரவணன் (20) காரை ஓட்டினாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆத்தூா் காவல் நிலையம் அருகில் வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதையடுத்து ஓட்டுநா் காரை நிறுத்தினாராம். அப்போது, திடீரென காா் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

உடனடியாக காரில் இருந்தவா்கள் வெளியேறியதால் உயிா் தப்பினா். தகவலறிந்த சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன தீயணைப்பு வீரா்கள், திருச்செந்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும் காா் முற்றிலும் எரிந்தது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com