தூத்துக்குடியில் தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி
பிரதமரின் சுயசாா்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.


பிரதமரின் சுயசாா்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான சுயசாாா்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் சிறப்பு நுண்கடன் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தோ்வு செய்யப்பட்ட 480 தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்க ஒப்புதல் செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 16 பயனாளிகளுக்கு கடனுதவிகளை மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் வழங்கினாா். நிகழ்ச்சியில், உதவி ஆணையா் து.சந்திரமோகன், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி முள்ளக்காடு கிளை மேலாளா் கணேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடியில் இதுவரை 164 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், 200 பேருக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் மீதமுள்ள 116 பேருக்கும் கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...