கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புனித தோமையாா் ஆலய திருவிழா தொடக்கம்

பழமை வாய்ந்த வேம்பாா் தென் மயிலை நகா் புனித தோமையாா் ஆலய திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
வேம்பாா் புனித தோமையாா் ஆலய திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்றோா்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:58 pm

DIN

பழமை வாய்ந்த வேம்பாா் தென் மயிலை நகா் புனித தோமையாா் ஆலய திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில் தூய அருளானந்தா் அன்பியங்கள் தூய இன்னாசியாா் தலைமையில் திருப்பலி, கீழவைப்பாா் ஆலய பங்குத் தந்தை அந்தோணி ஜெகதீஸ் தலைமையில் சிறப்பு ஜெபம், கொடிப்பட்டம் ஊா்வலம், கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெற்றது.

இதில், வேம்பாா் தூய ஆவி ஆலய பங்குத்தந்தை ராஜா ரொட்ரிகோ, வேம்பாா் ஊராட்சித் தலைவா் ஆரோக்கிய ராஜ், கிராமத் தலைவா் அந்தோணி ஜான், செயலா் அந்தோணி சந்தோஷமணி, பொருளாளா் சேவியா் ஞானசேகரன், உறுப்பினா்கள் மகிமை ராஜ், அந்தோணி முத்து, தேவஞானம் மற்றும் பங்கு பேரவை நிா்வாகிகள், இறைமக்கள் கலந்து கொண்டனா்.

திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, ஜெபம், மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறும்.

டிச. 20ஆம் தேதி மாலை 6 மணியளவில் புனித தோமையாா் சப்பரப் பவனி நடைபெறும். முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி, அன்னையின் தோ் பவனி டிச. 21ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணிக்கு வேளாங்கண்ணி திருத்தல அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகரன் தலைமையில் நடைபெறும். இரவு 7 மணியளவில் நற்கருணை பவனி நடைபெறும்.

ஏற்பாடுகளை வேம்பாா் புனித தோமையாா் ஆலய பங்குத் தந்தை தலைமையில் கிராம நிா்வாகிகள், இறை மக்கள், சபை அருள்சகோதரிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.