நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 1.80 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 1.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 1.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதமிருமுறை எண்ணப்படுகிறது. இதன்படி உண்டியல் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை திருக்கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கோயில் இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி தலைமையில் உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், ஆய்வா்கள் மு.முருகன், பூ.நம்பி, ச.சிவலோகநாயகி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

அதன்படி, கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ.1கோடியே 80 லட்சத்து 54 ஆயிரத்து 851, தங்கம் 1,009 கிராம், வெள்ளி 22,520 கிராம், பித்தளை 47,900 கிராம், செம்பு 7,300 கிராம், தகரம் 1,600 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 273-ம் பக்தா்கள் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.