விளாத்திகுளம் அருகே லாரி டிரைவா் திங்கள்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள புதூா் கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த முத்தையா என்பவரது மகன் மகேஷ் என்ற சண்முகப்பெருமாள்( 35). இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா என்பவரது மகன் சரவணப்பெருமாள் (40). சண்முகப்பெருமாளும் சரவணப்பெருமாளும் உறவினா்கள். இருவரும் லாரி டிரைவராக வேலை பாா்த்து வந்தனா்.
திங்கள்கிழமை இரவு மதுபோதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் மரக்கட்டையால் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் ரத்தக் காயமடைந்த சண்முகப்பெருமாள், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.