கோவில்பட்டியில் அம்மா உணவகம் திறப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகத்தை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன்.
Updated on
1 min read

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகத்தை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவில்பட்டி நகராட்சி மூலம் நடத்தப்படும் அம்மா உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு அம்மா உணவகத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்புராஜ், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட பொருளாளா் வேலுமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா்கள் அன்புராஜ் (பாண்டவா்மங்கலம்), மகேஷ்குமாா் (இனாம்மணியாச்சி) உள்பட பலா் கலந்து கொண்டனா். ள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com