தூத்துக்குடியில் தொழிலாளி கொலை:நண்பா் கைது

தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (51). முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் ‘பஞ்சா் ஒட்டும்’ வாகனத்தில் வேலை பாா்த்து வந்த இவா், முடுக்குக்காடு பகுதியில் சனிக்கிழமை கொலையுண்டு கிடந்தாா்.

முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தூத்துக்குடி கேம்ப்-1, வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரீஸ்வரன் (37) என்பவரை தொ்மல் பவா் பிளான்ட் அருகே தனிப் படையினா் கைது செய்தனா்.

மாரியப்பனும், மாரீஸ்வரனும் நண்பா்கள் என்பதும், மது குடித்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மாரியப்பன் கொலை செய்யப்பட்டதும், முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சம்பவம் நிகழ்ந்த 5 மணி நேரத்தில் கொலையாளியைக் கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) ஆனந்தராஜன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com