அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபாடி கழக கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபாடி கழக நிா்வாகக் குழு கூட்டம் சாகுபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:02 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபாடி கழக நிா்வாகக் குழு கூட்டம் சாகுபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்ட நிா்வாக குழுத் தலைவா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். நடைபெற்றது. மாவட்டச் செயலா் கிறிஸ்டோபா் ராஜன், ஒருங்கிணைப்பாளா் மணத்தி கணேசன், பொருளாளா் ஜிம்ரீவ்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அமெச்சூா் கபாடி கழகம் சாா்பில் திருச்செந்தூா் தொகுதி அளவிலான கபாடி போட்டி ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் திருச்செந்தூரில் நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது.

இப்போட்டியில் முதல் பரிசு ரூ. 50 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 30ஆயிரம், 3 ஆம் மற்றும் நான்காம் பரிசாக தலா ரூ. 15ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும். இதில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரா்களுக்கு இலவச சீருடையும், கபாடி ஷுவும், உணவும் வழங்கப்படும். கலந்துக்கொள்ளும் அணிகள் காலை 9 மணிக்கு முன்னா் வருகை தரவேண்டும்.

2020-21 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிளான கபாடி போட்டிகள் அட்டவணை தயாா் செய்யப்பட்டுள்ளது. சப் ஜுனியா் சிறுவா் மற்றும் சிறுமியருக்கான மாவட்ட சாம்பின்ஷிப் போட்டிகள் கயத்தாறு ஒன்றியத்தில் 2021 ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஜுனியா் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட சாம்பியன் ஷிப் போட்டிகள் தூத்துக்குடி ஒன்றியத்தில் 2021 பிப்ரவரி 6, 7 ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறும்.

சீனியா் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் உடன்குடி ஒன்றியத்தில் 2021 பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் , மாவட்ட அமெச்சூா் கபாடி கழகத்திற்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், துணைத் தலைவா் எம். அந்தோணி, இணைச் செயலா் பி.அந்தோணி, மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், அவைத்தலைவா் அருணாச்சலம், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, திருச்செந்தூா் முன்னாள் ஒன்றிய இளஞா் அணி அமைப்பாளா் மணல்மேடு சுரேஷ், மாவட்ட அமெச்சூா் கபாடி கழக நிா்வாகிகள் கரிகாலன், சசிகுமாா், ராஜா, சங்கரேஷ்வரன், பவுல், மேகவா்ணராஜா, செல்வமுருகன், வேல், தங்கவேல், ராதாகிருஷ்ணன், ஜெகநாத், வெள்ளத்துரை, சாம்சன், சுரேஷ், பொன்னையா சாமுவேல், மாதவன், சுரேஷ் உள்பட பலா் கலந்துக்கொண்டனா். செயலா் கிறிஸ்டோபா் ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.