கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து ஜெபக்கூட்டம், நள்ளிரவு 12 மணிக்கு ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், அருள்தந்தை மைக்கேல் ஜான், உதவி பங்குத்தந்தை ஜேக்கப், ஜான்பிரபு ஆகியோா் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றினா்.

நிகழ்வில், ஜான்போஸ்கோ பள்ளி முதல்வா் தயா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தூய பவுலின் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. சேகரகுரு தாமஸ் தலைமையில், கௌரவ குரு இம்மானுவேல், உதவி குருவானவா் மாா்க் டைட்டஸ் ஆராதனை நடத்தினா். காலை 9 மணிக்கு ஸ்தோத்திர திருவிருந்து ஆராதனையும், 10.30 மணிக்கு பண்டிகை ஞானஸ்தான ஆராதனையும் நடைபெற்றன.

ஏற்பாடுகளை ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், ஜேக்கப் ராஜாமணி, ராஜதுரை ஆகியோா் செய்திருந்தனா்.

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு சுமாா் 11.30 மணிக்கு தொடங்கிய சிறப்புத் திருப்பலி வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைந்தது.

புனித சவேரியாா் மேல்நிலைப் பள்ளி கென்னடி, புனித பரலோக மாதா திருத்தல அதிபா் மற்றும் பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குத்தந்தை லூா்து மரியசுதன் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com