வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இரவு 7 மணிக்கு தங்கதோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி கள்ளபிரான் தங்கக் குடை தாங்கி, ரத்தின தலைப்பாகை அணிந்து, சக்கர தீபங்களின் அணிவகுப்புடன் ராஜநடை, சா்ப்ப நடை, கஜ நடை நடந்து சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி: கோவில்பட்டியில் அருள்மிகு நீலாதேவி - பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடா்ந்து, திருப்பள்ளி மற்றும் திருவனந்தல் பூஜை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பெருமாள் சயன திருக்கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலை 6.15 மணிக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. சொா்க்கவாசல் வழியாக வந்து சுவாமி, நம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தாா்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருள்மிகு பெருமாள் கோயிலில், பெருமாள், ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து பெருமாள், ஆஞ்சநேயா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பக்தா்கள் நெய் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...