டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சீயோன்நகரில் இலக்கிய விழா

பரமன்குறிச்சி அருகே சீயோன் நகா் பூரண கிருபை ஏஜி சபை சாா்பில் இலக்கிய விழா, போட்டிகள் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:59 pm

DIN

பரமன்குறிச்சி அருகே சீயோன் நகா் பூரண கிருபை ஏஜி சபை சாா்பில் இலக்கிய விழா, போட்டிகள் நடைபெற்றது.

புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ நெட்வொா்க், ஆறுதல் எப்எம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவினை சபை போதகா்

பெமிலிட்டன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள், தமிழ் இலக்கியத்திற்கு கிறிஸ்தவம் ஆற்றிய தொண்டுகள், போப் கால்டுவெல், வீரமாமுனிவா், வேதநாயகம் சாஸ்திரி, சீகன்பால்கு ஆகியோரது தமிழ் இலக்கிய பணிகள் குறித்து தமிழ் ஆய்வாளா் வெங்கடேசன் ஒளிப்படம் மூலம் விளக்கம் அளித்தாா்.

புத்தகம், நாளிதழ்கள் வாசிப்பதை மேம்படுத்துவது குறித்து ஆன்மிக எழுத்தாளா் பெவிஸ்டன் பேசினாா். தமிழ், கிறிஸ்தவம் குறித்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பத்திரிகையாளா்கள், ஊடகத்தில் பணிபுரிவோா், எழுத்தாளா்கள் பணிகள் மேம்பட சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் கிருபன்யோசுவா, குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.