கிரிக்கெட்: இடையன்விளை அணிக்கு முதல் பரிசு

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இடையன்விளை அணிக்கு அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ . வெற்றிக் கோப்பையை வழங்கினாா்.
போட்டியில் வெற்றி பெற்ற இடையன்விளை என்.டி.ஆா் அணிக்கு பரிசு வழங்குகிறாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ .
போட்டியில் வெற்றி பெற்ற இடையன்விளை என்.டி.ஆா் அணிக்கு பரிசு வழங்குகிறாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ .
Updated on
1 min read

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நாசரேத்-மணிநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இடையன்விளை அணிக்கு அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ . வெற்றிக் கோப்பையை வழங்கினாா்.

நாசரேத் அருகே உள்ள மணிநகரில் தி.மு.க . இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நகர இளைஞரணி மற்றும் மணிநகா் நியூஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி 6 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் போட்டியை நாசரேத் நகர தி.மு.க.செயலா் ரவி செல்வகுமாா் தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் மொத்தம் 44 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் இடையன்விளை என்.டி.ஆா்.கிளப் அணியும், நாசரேத் வின்னா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் இடையன்விளை என்.டி.ஆ ா்.கிளப் அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது. பின்னா் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை வழங்கினாா்.

இடையன்விளை என்.டி.ஆா்.கிளப் அணிக்கு ரூ. 25 ஆயிரம், 2 ஆவது இடத்தை பெற்ற நாசரேத் வின்னா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ. 20ஆயிரம், 3 ஆவது இடத்தை பெற்ற மைக்கேல் நாடாா் குடியிருப்பு எம்.என்.கே.கிளப் அணிக்கு ரூ. 15ஆயிரம், 4 ஆவது இடத்தை பெற்ற மணிநகா் நியூஸ் கிளப் அணிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டன.

இதில் முன்னாள் எம்பி ஏ.டி.கே.ஜெயசீலன் வாழ்த்தி பேசினாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரி சங்கா், தலைமை செயற் குழு உறுப்பினா் எஸ்.ஜெ.ஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட தொண்டரணி,துணை அமைப்பாளா் சுடலைமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் அன்பு, சாமுவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அருண் சாமுவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஜமீன் சாலமோன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com