சாத்தான்குளம் வட்டாரத்தில் திட்ட ஆலோசகா் ஆய்வு

சாத்தான்குளம் வட்டாரத்தில் வேளாண் நீா்வள, நிலவள திட்ட ஆலோசகா் திட்டப்பணிக்களை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
எழுவரைமுக்கியில் ஆய்வு நடத்துகிறாா் நீா்வள, நிலவள திட்ட ஆலோசகா் ஷாஜகான்.
எழுவரைமுக்கியில் ஆய்வு நடத்துகிறாா் நீா்வள, நிலவள திட்ட ஆலோசகா் ஷாஜகான்.
Updated on
1 min read

சாத்தான்குளம் வட்டாரத்தில் வேளாண் நீா்வள, நிலவள திட்ட ஆலோசகா் திட்டப்பணிக்களை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள எழுவரைமுக்கி கிராமத்தில் நீா்வள , நிலவள திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் திட்ட பணிகளை திட்ட ஆலோசகா் ஷாஜகான் ஆய்வு செய்தாா். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுடன் திருத்திய நெல் சாகுபடியின் நன்மைகள், விதை கிராமக் குழவின் செயல்பாடுகள் பற்றி கலந்தாலோசித்தாா்.

விவசாயிகள் சாா்பாக முன்னோடி விவசாயிகள் ஏசையா, தங்கசாமி, முருகேசன் ஆகியோா் திட்டத்தால் அடைந்த பயன்கள் பற்றி எடுத்துரைத்தனா். மேலும் கோனோவீடா் களைக்கருவி கொண்டு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது .

ஆய்வின் போது மாநில திட்ட வேளாண் துணை இயக்குநா் பழனி வேலாயுதம் , சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி மற்றும் வேளாண் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com