தூத்துக்குடியில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது


மின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று கருப்புக்கொடி ஏந்தியும். வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமையில் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மின் கட்டண உயர்வு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...