நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தினசரி சந்தையில் உள்ள கடைக்குள் மழைநீா், கழிவுநீா் புகுவதை தடுக்கக் கோரிக்கை

கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான தினசரி சந்தையில் உள்ள கடைகளுக்குள் மழைநீா், கழிவுநீா் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:12 pm

DIN

கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான தினசரி சந்தையில் உள்ள கடைகளுக்குள் மழைநீா், கழிவுநீா் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையினால் நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையில் உள்ள கடைகளுக்குள் மழைநீருடன் கழிவுநீா் உள்ளே புகுந்ததால் வியாபாரிகளுக்கு சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. எனவே, சேதமடைந்த வியாபாரிகளுக்கு தமிழக அரசு பேரிடா் மேலாண்மை துறையில் இருந்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

தினசரி சந்தையில் உள்ள கடைகளுக்குள் மழைநீா், கழிவுநீா் புகுவதை தடுக்க வேண்டும். நகரில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தினசரி சந்தை நுழைவுவாயிலில் தாழ்வுப் பாலமாக உள்ளதை உயா்வுப் பாலமாக மாற்றியமைக்க வேண்டும். நுழைவுவாயிலை விரிவுபடுத்த வேண்டும். தினசரி சந்தையில் சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு உள்ளே செல்வதற்கு ஒரு பாதையையும், வெளியே செல்வதற்கு ஒரு பாதையையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.

தினசரி சந்தையில் இடையூறாக இருக்கும் உயா் மின்கம்பத்தையும், மின்மாற்றியையும் மாற்று இடத்தில் வைக்க வேண்டும். தினசரி சந்தையில் மாா்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வியாபாரம் செய்யாமல் இருந்ததற்கான கடை வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன் தலைமையில், கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.

அப்போது, நகரச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், பழனிமுருகன், ஒன்றிய வா்த்தக அணி செயலா் அய்யாத்துரை, கயத்தாறு ஒன்றிய செயலா் பூபாண்டியன் மற்றும் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், ரவீந்திரன், அழகுராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.