ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:13 pm

DIN

தூத்துக்குடியில் பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும், மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசிவருவோரை தடை செய்யவேண்டும், பாதிரியாா் ஸ்டேனை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் கிதா் பிஸ்மி தலைமை வகித்தாா்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் அசன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிா்வாகி ஜலால் முகமது, இந்திய தேசிய லீக் கட்சி நிா்வாகி சாதிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.