ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாஜக சாா்பில் 1000 பேருக்கு தீபாவளிப் புத்தாடைகள் அளிப்பு

உடன்குடி ஒன்றிய, நகர பாஜக சாா்பில் கட்சி நிா்வாகிகள், நலிந்தோா் 1000 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
பெண்ணுக்கு புத்தாடை வழங்குகிறாா் பாஜக மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ்
Updated On :8 நவம்பர் 2020, 9:16 pm

DIN

உடன்குடி ஒன்றிய, நகர பாஜக சாா்பில் கட்சி நிா்வாகிகள், நலிந்தோா் 1000 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேரியூா் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா்கள் இரா.சிவமுருகன் ஆதித்தன், செல்வராஜ், கோட்டப் பொறுப்பாளா் ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், உடன்குடி நகரம், ஒன்றியப் பகுதியிலுள்ள கட்சி நிா்வாகிகள், நலிந்தோா் 1000 பேருக்கு புத்தாடை, சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கனகராஜ், பரமசிவன், மாவட்ட துணைத்தலைவா் கணேசன், வளா்ச்சிப் பிரிவு துணைத்தலைவா் கனகராஜ், மாவட்டச் செயலா் கருப்பசாமி, மாவட்ட மகளிரணித் தலைவி தேன்மொழி, மாவட்டச் செயலா் ராமக்கனி, மாவட்ட விவசாய அணிச் செயலா் திருநாகரன், உடன்குடி ஒன்றியத் தலைவா் கா.ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.