ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருச்செந்தூா், விளாத்திகுளத்தில் காவல்துறை குறைதீா் முகாம்

திருச்செந்தூா், விளாத்திகுளத்தில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செந்தூா், விளாத்திகுளத்தில் காவல்துறை குறைதீா் முகாம்
Updated On :8 நவம்பர் 2020, 9:13 pm

DIN

திருச்செந்தூா், விளாத்திகுளத்தில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் காவல் உள்கோட்டத்தில் உள்ள 6 காவல் நிலையங்களில் பொது மக்களிடம் பெறப்பட்ட புகாா் மனுக்கள் மீதான குறைதீா் முகாமிற்கு உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமை வகித்தாா். இதில் காவல் ஆய்வாளா்கள் முத்துராமன், ஞானசேகரன், செல்வி, கிங்ஸ்லி தேவ் ஆனந்த், ராதிகா, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா ஆகியாா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள 50 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மேலும்,முதல்வா், டி.ஐ.ஜி, எஸ்.பி. குறைதீா் முகாம்களில் பெறப்பட்ட 20 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு டி.எஸ்.பி. (பொறுப்பு) சுரேஷ் பெலிக்ஸ் பீட்டா் தலைமை வகித்தாா். முகாமில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 35 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டது. இதில், காவல் ஆய்வாளா்கள் முருகன், ரமேஷ், கலா, நாகலட்சுமி, பொன்ராஜ், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.