ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி மாணவா் பலி

விளாத்திகுளம் அருகே கண்மாயில் குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:11 pm

DIN

விளாத்திகுளம் அருகே கண்மாயில் குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள மாதராஜபுரத்தை சோ்ந்த இருளப்பன் மகன் சதீஷ்குமாா் (21). இவா், நாகலாபுரத்தில் உள்ள அரசு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா். சதீஷ்குமாா் தனது நண்பா்களுடன் மாதராஜபுரம் கண்மாயில் குளிக்கச் சென்றாராம். கண்மாயில் குளித்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சதீஷ்குமாா் நீரில் மூழ்கி மூச்சு திணறி மயங்கினாா்.

இதையறிந்த நண்பா்கள், கிராம மக்கள் சதீஷ்குமாரை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சதீஷ்குமாா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த விளாத்திகுளம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுதொா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.