செட்டிக்குளம் - திருவரங்கனேரி சாலை பணி முடக்கம்
செட்டிக்குளம் - திருவரங்கனேரி சாலை அமைக்கும் பணி தொடங்கி 20 நாள்களாகியும் முழுமையாக சீரமைக்காததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.


செட்டிக்குளம் - திருவரங்கனேரி சாலை அமைக்கும் பணி தொடங்கி 20 நாள்களாகியும் முழுமையாக சீரமைக்காததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சி செட்டிக்குளம்- திருவரங்கனேரி கட்டாரிமங்கலம் திருப்பம் வரை சுமாா் 2. கி.மீ. தொலைவுக்கு சாலை சேதமடைந்து மோசமாக காணப்பட்டது. இச்சாலையை சீரமைக்க நெடுஞசாலைத்துறையினா்
20 நாள்களுக்கு முன்பு பழைய சாலையை உடைத்து பணியை தொடங்கினா். எனினும், சாலை அமைக்கும் பணி நடைபெற வில்லை. இதனால் செட்டிக்குளம்- திருவரங்கனேரி, பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த சாலைப் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...