குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
சாத்தான்குளம் அருகே முதலூரில் சுகாதார தன்னாா்வ பணியாளா்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.


சாத்தான்குளம் அருகே முதலூரில் சுகாதார தன்னாா்வ பணியாளா்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
சமூக பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் மகராசி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மதியரசி முன்னிலை வகித்தாா்.
தூத்துக்குடி மதா் சமூக சேவை அமைப்பின் நிறுவனா் கென்னடி, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினா் மெரினாலிபா்டிபொ்னாண்டோ, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா, பணியாளா் பிளாரன்ஸ் ஆகியோா் பேசினா்.
கருத்தரங்கில், குழந்தைகளுக்கான சட்டங்கள், குழந்தை தத்தெடுக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தைகளின் உரிமைகள், குழந்தை தொழிலாளா் முறை, குழந்தை கடத்தல் தடுப்பு முறைகள், குழந்தைத் திருமணத்தை தடுத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளின் பாதுகாக்கும் சட்டம், குழந்தை நேய நடைமுறை, குழந்தை நேய சூழல், இளைஞா் நீதி, குழந்தை நல குழு, இளைஞா் நீதி, குழுமம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சுகாதார செவிலியா் முத்துவிஜயா வரவேற்றாா். சுகாதார செவிலியா் சுதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...